Skip to content

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு வெற்றி: வெள்ளை மாளிகை அறிவிப்பு

Victory for the U.S. in the Iran issue: White House announcement

0 views

Description

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதிலை அளிக்கவில்லை. எனினும், இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவிற்கும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நமது ராணுவத்திற்கும் கிடைத்த வெற்றி என வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கச் செய்துள்ளார்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆபரேஷன் எபிக் பியூரி என்ற ராணுவ நடவடிக்கை 4 முதல் 6 வாரங்கள் வரை நீடிக்கும் என்று அதிபர் தொடக்கத்திலேயே கூறியிருந்ததை லெவிட் சுட்டிக்காட்டியுள்ளார். ராணுவ நடவடிக்கை 4 முதல் 6 வாரங்கள் நீடிப்பு தற்போது 38 நாட்களில் அமெரிக்கா தனது முக்கிய ராணுவ இலக்குகளை எட்டி, அதற்கும் மேலான சாதனைகளைப் படைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தின் வெற்றி, ஈரானுடன் கடுமையான பேச்சுவார்த்தைகளை நடத்த ஜனாதிபதிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. இது நீண்டகால அமைதி மற்றும் ராஜதந்திர தீர்வுக்கு வழிவகுக்கும் என்று லெவிட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்செத் மற்றும் கூட்டுப்படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் ஆகியோர் புதன்கிழமை காலை இது குறித்து விரிவான விளக்கங்களை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்கள் ராணுவத்தின் வெற்றி, ஜனாதிபதி ட்ரம்ப் குழுவினருக்கு பேச்சுவார்த்தையில் அதிக செல்வாக்கை வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார். இதுவே தற்போது ராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கும், நீண்டகால அமைதிக்கும் ஒரு புதிய கதவைத் திறந்துவிட்டுள்ளது என கரோலின் லெவிட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related listings

More in News

See all