Skip to content

அனலைதீவில் நடமாடும் அரச சேவை – பல்வேறு அரச சேவைகள் ஒரே இடத்தில் அனலைதீவு | யாழ்ப்பாணம்

1 viewAnalitheevu Jaffna

Description

அனலைதீவில் நடமாடும் அரச சேவை – பல்வேறு அரச சேவைகள் ஒரே இடத்தில் அனலைதீவு | யாழ்ப்பாணம் ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் ஊர்காவற்துறை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் அரச சேவை, அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நடமாடும் சேவையின் மூலம் பொதுமக்கள் ஒரே இடத்தில் பல்வேறு அரச நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை தொடர்பான சேவைகள், ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் வழங்குதல் ஆகியவை முக்கியமாக இடம்பெற்றன. மேலும், மோட்டார் வாகன பதிவு, வாகன வருமான அனுமதிப்பத்திரம், பிரதேச சபை சேவைகள், பொலிஸ் திணைக்கள சேவைகள், மனிதவள அபிவிருத்தி மற்றும் தொழில் வழிகாட்டல், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள், சமூக சேவைகள் திணைக்களம், முதியோர் தேசிய செயலகம், காணி தொடர்பான சேவைகள் போன்ற பல்வேறு அரச சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதனுடன் இணைந்து, மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தகுதியுடையவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில், பொதுமக்களுக்கு துணிப் பைகள், முதியவர்களுக்கான அத்தியாவசியப் பொதிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நடமாடும் சேவையின் மூலம் தீவக மக்களின் அரச சேவைகளுக்கான அணுகல் எளிதாக்கப்பட்டதுடன், அரச–மக்கள் உறவை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகவும் இது அமைந்தது.

Related listings

More in Media & Social

See all
Box Guitar

Box Guitar

Media & Social576/ Dolawaththa…
Chandana Ranasinghe4
Rest in Peace

Rest in Peace

Media & SocialBatticaloa
tharmaratnam kanesaratnam2